32 MP செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி…!!

சியோமி நிறுவனம் இந்தியாவில் Redmi Y3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில்   6.26 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 GP ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 கொண்டிருக்கும் Redmi Y3 மாடலில் பின்பக்கம்   12 MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 MP இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் 32 MP செல்ஃபி கேமரா, 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

Image result for Redmi Y3

Redmi Y3-ல் முன்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் மற்றும் பின்புறம் ரிஃப்ளெக்டிவ் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் P2i நானோ கோட்டிங் கொண்ட வாட்டர் ப்ரூஃப் வசதியுடன் பின்புறம் கைரேகை சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. Redmi Y3 மாடலில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 MAH கொண்ட பெரிய  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Image result for Redmi Y3

சியோமி Redmi Y3 ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதில் எலிகன்ட் புளு, போல்டு ரெட் மற்றும் பிரைம் பிளாக். இதன் 3 GP ரேம் விலை ரூ.9,999-க்கும் 4 GP ரேம் விலை ரூ.11,999-க்கும்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் ஏப்ரல் 30 ஆம் தேதி விற்பனை துவங்குகிறது.