அதிரடி விலை குறைப்பில் ரெட்மி ஸ்மார்ட்போன் … ஆச்சரியத்தில் மிதக்கும் வாடிக்கையாளர்கள் ..!!

இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது . 

இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. இந்த ரெட்மி கே20 ப்ரோ 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 27,999 என்றும் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 30,999 என அந்நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது. தற்போது,  ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது.

Image result for redmi k20 pro images

அதன்படி  ரெட்மி கே20 ப்ரோ 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 24,999 என விற்பனை செய்யப்பட உள்ளது. இதுமட்டுமின்றி,  தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.  குறிப்பாக Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. மேலும், ரெட்மி கே20 ப்ரோ டாப் எண்ட் மாடலான 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 27,999 என விற்பனை செய்யப்பட உள்ளது.

Image result for redmi note 7 s images

இதன்முலம் புதிய ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3000 வரை குறைக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி,  ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 8,999 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனுடன் வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படவுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே,

Related image

குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 எம்.பி. 124.8° அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 20 எம்.பி. பாப் அப் செல்ஃபி கேமரா, ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 3P லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *