இட்லிக்கு தொட்டுக்க சூப்பரான ரெட் சட்னி!!! 

ரெட் சட்னி 

தேவையான பொருட்கள்:

தக்காளி – 5

வரமிளகாய்  – 5

கொத்தமல்லி தூள்  –  1/2  ஸ்பூன்

சீரகம்  – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள்  – 1/2  ஸ்பூன்

இஞ்சி  – 1  துண்டு

பெருங்காயதூள் –  சிறிதளவு

உப்பு –  தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

idly dosa க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , வர மிளகாய் , சீரகம் , மஞ்சள்தூள்  மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இதனுடன் தக்காளி , கொத்தமல்லி தூள் , உப்பு  , பெருங்காயதூள் சேர்த்து வதக்கி ,சிறிது  தண்ணீர் ஊற்றி வேகவிடவும் .வெந்ததும் இறக்கி , ஆற வைத்து  அரைத்தெடுத்தால் சூப்பரான ரெட் சட்னி  தயார் !!!