கேரளாவுக்கு இன்று ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எட்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
அதே போல அங்கு கொட்டித்தீர்த்த கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. 2.26 லட்சம் மக்கள் அங்குள்ள 1,239 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல இடுக்கி, திரிசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர், கசர்கோட் ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் மீட்புப்பணி பேரிடர் படையினர் தயாராக இருக்கின்றனர்.