“நாங்களும் வெற்றி பெறுவோம்” சர்வதேச வீராங்கனைகளை பின்னுக்கு தள்ளி….. தமிழ்நாட்டு பெண்மணியின் சாதனை….!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தடகள போட்டியில் தங்கம் வென்று சர்வதேச வீராங்கனைகளை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளார்.

தேசிய தடகளப் போட்டிகள் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் பாட்டியாலாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டும் 20 பேர் தமிழ்நாடு அணியின் சார்பாக போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள குண்டூர் பகுதியில் வசிக்கும் தனலட்சுமி என்ற பெண் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்துள்ளார். அப்போது இவர் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலமாகவே சர்வதேச போட்டிகளில் பங்குபெற தனலட்சுமிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பெண்கள் பிரிவில் 100 மீட்டர் தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்து திருச்சியை சேர்ந்த தனலட்சுமி வெற்றி பெற்று தங்கம் பதக்கத்தை வென்றுள்ளார். இவர் ஹிமா தாஸ், டூட்டி சந்த் போன்ற சர்வதேச வீராங்கனைகளை பின்னுக்கு தள்ளி மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான தடகள வீரர் இலக்கியதாசன் என்பவர் ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *