“இந்தியாவில் இ-சிகரெட்_க்கு தடை” மத்திய அரசிடம் பரிந்துரை ….!!

இ-சிகரெட்_டை இந்தியாவில் தடை செய்ய போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

சிகரெட் பழக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட சில நாடுகளில் இ-சிகரெட் என்ற எலெக்ட்ரானிக் சிகரெட்களை பயன்படுத்தப்படுகிறது. இதனை இந்தியாவில் பயன்படுத்தலாமா ? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவின்பேரில் போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு செய்தது.

Image result for இ-சிகரெட்

இந்த ஆய்வில் இ-சிகரெட்கள் புகைப்பதால் உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் ஆய்வு முடிவின் அடிப்படையில் , மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தயாரிப்பதை நிறுத்தி, இ-சிகரெட்டுகளை விற்கவும், இறக்குமதி செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரிய பரிந்துரை செய்துள்ளது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *