ரியல்மியா ? ரெட்மியா ? போட்டி போடும் புதிய ஸ்மார்ட்போன் ..!!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளது.

ரியல்மி நிறுவனம், தற்போது முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக வளர்ந்து விட்டது. இந்நிலையில் ரியல்மி நிறுவனம் புதியதாக ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்  4ஜிபி மற்றும் 64ஜிபி, 6ஜிபி மற்றும் 64ஜிபி, மற்றும் 8ஜிபி மற்றும் 128ஜிபி என மூன்று வேரியன்ட்களில்அறிமுகமாகவுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள்  நீல நிறத்திலும், விரைவில் வெள்ளை நிறத்திலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Image result for realme xt

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 எஸ்.ஓ.சி ப்ரோஸ்ஸ்ஸர் மற்றும் வாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்துடனும், 6.4-இன்ச் சூப்பர் அமோல்ட் திரையையும் கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போனின் இரண்டு புறங்களிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டுள்ளது. இதில் மென்பொருளை பொருத்தவரை ஆண்ட்ராய்ட் 9 பையை மையப்படுத்தி கலர் ஓ.எஸ் 6 அமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் நான்கு பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

Related image

இதில், 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவையும் , 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவும், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 4,000எம்.ஏ.ஹெச். பேட்டரியும்,  20டபுள்யூ, விஓஓசி 3.0 விரைவு சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Image result for realme xt

 

 

மேலும்,  டைப்-சி சார்ஜர் போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் விலை குறித்த எந்த தகவல்களும் வெளிவரவில்லை. மேலும் , இந்த ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் க்ஸியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.