“REAL LIFE IRONMAN” நவீன உலகின் தொழில்நுட்ப தந்தை… எலன் மஸ்க்கின் வியப்பூட்டும் கதை..!!

அயன் மேனை போலவே தொழிலில்நுட்பத்தில் புகுந்து விளையாடும் எலன் மாஸ்க்கின் கதையை இறுதிவரை படிப்போரின் வாழ்வின் நிச்சயம் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

திரைப்படத்தில் வரும் அயன் மேன் கதாபாத்திரத்தை போல தொழில்நுடபத்தின் மீது மோகம் கொண்டதால் உலக பணக்காரர்கள் பட்டியலில்  இடம் பிடித்த எலன் மிஸ்கின் கதை வாசிப்போர் அனைவரையும் வியப்பூட்டச் செய்வதோடு , வாழ்க்கையிலும் ஒரு விதமான மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்தும்.

Image result for elon musk vs iron man

எலன் மஸ்க் என்பவர் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அனால் இவருக்கு பணத்தின் மீது மோகம் கிடையாது மாறாக தொழிநுட்பங்களின் மீது மோகம் கொண்டவர். ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு  அடுத்தபடியாக தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் எலன் மஸ்க்.இவர் தன் வாழ்க்கையில் எப்படி வெற்றி அடைந்தார் என்பதை அவரே அவர் கைப்பட ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,

Image result for elon musk

சிறுவயதிலேயே தாயும், தந்தையும் விவாகரத்து வாங்கிய பின் தந்தையுடன் வாழ்க்கையை கழித்த இவர் தனது சிறுவயதில் மிகவும் மோசமான சூழலில் வாழ்க்கையை கழித்து வந்துள்ளார். அவர் தந்தை மிகவும் கடினமாக, அன்பு காட்டாமல் நடந்து கொள்வதால் சிறுவயதில் சந்தோஷத்தை இவர் கண்டதே இல்லை. பள்ளிகளிலும் இவரை அனைவரும் வெறுத்து ஒதுக்குவார்கள் சிறுவயது முதல் தனிமையில் இருந்து வந்ததால் அவருக்கு திடீரென்று புத்தகங்களின் மேல் ஈடுபாடு வந்தது. ஆகையால் நட்பு காதல் இவை எதுவுமின்றி புத்தகங்களை மட்டுமே நேசிக்க ஆரம்பித்ததால் நாள் முழுவதும் புத்தகங்களை வாசிப்பதையே பொழுதுபோக்காக வைத்திருந்தார்.

Image result for book reading

வீட்டின் அருகே உள்ள இரண்டு நூலகங்களில் இருக்கக்கூடிய அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டு புத்தகம் இல்லாத காரணத்தினால் என்சைக்ளோபீடியா புத்தகத்தை முழுமையாக படித்து முடித்து விட்டார். இந்த வாசிப்பு பழக்கம் தான் இவருக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்ற அளவுக்கு இவரது புத்திசாலித்தனத்தை உயர்த்தியுள்ளது. ஏதேனும் ஒரு தொழில் தொடங்கி செயல்படுத்த வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது. ஆகையால் இவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே முடித்துக் கொண்டார். இதையடுத்து இவர் முதன் முதலாக பிளாஸ்டர் என்னும் வீடியோ கேமை தயாரித்து அதனை 500 டாலர்களுக்கு விற்றுள்ளார். இதுவே இவரது முதல் தொழில்.

Image result for blaster game

 

இதைத்தொடர்ந்து சம்பாதித்த பணத்தை கொண்டு ஆர்க்கிடெக்சர் கேம் மையத்தை  உருவாக்க வேண்டும் என்று நினைத்தார். அதன்படி அனைத்து பொருட்களையும் வாங்க தயாராக இருந்த நிலையில், இவரது கம்பெனிக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போக அதை கைவிட்டு விட்டார். அதன்பின் பணப்பரிவர்த்தனையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் நினைத்தார். ஏனெனில் அப்போதைய காலகட்டங்களில் செக் மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்ததால், பணங்களை பெற்றுக்கொள்ள மிகவும் தாமதம் ஏற்பட்டது.

Image result for money transfer

இதனால் x.com என்ற இணையதளத்தை உருவாக்கினார். இதன் மூலம் பண பரிவர்த்தனையை எளிதாக மேற்கொள்ள முடிந்தது. அதே சமயத்தில் paypal என்னும் மற்றொரு பணப்பரிவர்த்தனை இணையத்தளமும் இவருக்கு போட்டியாக இருந்தது. காலப்போக்கில் இருவரும் இணைந்து paypal என்ற நிறுவனத்தையே மையமாகக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வந்தனர். இவர்களது இந்த paypal குழுவில் இருந்தவர்கள் அனைவருக்கும் ஒரு தனித்துவம் இருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த paypal வளர்ச்சி பெற உதவியவர்கள் பிற்காலங்களில் பல்வேறு இணைய தளத்தில் புரட்சியை ஏற்படுத்தினர். youtube, linkedin உள்ளிட்ட இணைய தளங்களும், செயலிகளும் இந்த குழுவில் இருந்து வெளியில் வந்த பின்பு தான் கண்டுபிடித்து வெளியிட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for paypal

அதன் பின் 2002 ஆம் ஆண்டில் Epay என்ற நிறுவனம் paypal நிறுவனத்தை 1.5 பில்லியன் டாலர்களுக்கு விலைக்கு வாங்கியது. இதில் 150 மில்லியன் டாலர் எலன் மஸ்க்கிற்கு லாபமாக கிடைத்தது. இதுவே இவரது வாழ்க்கை முழுவதும் வாழ்வதற்கு தேவையான பணம் ஆக இருந்த போதிலும், அதனை ஒரு பொருட்டாக கருதாமல் அத்தனை பணத்தையும் தனது அடுத்த தொழிலில் முதலீடு செய்ய நினைத்தார். அதன்படி அவர் மூன்று நிறுவனங்களை ஆரம்பித்தார். அதில் spacex என்னும் நிறுவனத்திற்கு 100 மில்லியன் டாலர்களும், டெஸ்லா என்னும் நிறுவனத்திற்கு 60 மில்லியன் டாலர்களும், சோலார் சிட்டி என்னும் நிறுவனத்திற்கு 20 மில்லியன் டாலர்களும் செலவழித்து மேற்கொண்டு செலவழிக்கப் பணம்  இல்லாமல் மற்றவர்களிடம் கடன் வாங்கினார்.

Image result for spacex tesla solarcity

இவர் தொடங்கிய அனைத்து நிறுவனங்களும் மனித வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் அமைந்திருந்தது. வாழ்க்கையில் ஒரு வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்று எண்ணமே இவரை இவ்வாறு செலவழிக்க வைத்துள்ளது. அவரது நிறுவனத்தில் ஒன்றான spacex நிறுவனம் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் வாழவைப்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளது என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. ஆனால் மனிதர்களை விண்ணில் செலுத்துவதற்கு ராக்கெட் மூலம் செலுத்த வேண்டும் என்பதால் அதற்கு அதிகம் செலவழிக்கப்படும். ஒரு தனியார் நிறுவனத்தால் அந்த அளவு பணத்தை முதலீடு செய்ய முடியாது என்று நினைத்தால் அதற்கு மாற்றாக ராக்கெட்டில் உள்ள லாஞ்சர் பகுதிகள் ஒருமுறை மட்டும் தான் பயன்படுத்த முடியும் அதனை பல முறை மறு பயன்பாட்டிற்கு உட்படுத்த என்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றிகரமாக அதனை கண்டுபிடிக்கவும் செய்தனர்.

Image result for spacex

 

ஆனால் அதன் தொடர் 3 சோதனை ஓட்டங்கள் தோல்வியில் முடிந்தது. அதன்பின் அவர் டெஸ்லா, சொலார்சிட்டி ஆகிய இரண்டு நிறுவனங்களின் மீது கவனம் செலுத்தினார். டெஸ்லா நிறுவனத்தை பொறுத்தவரையில் சுற்றுலா சுற்றுச் சூழல் அதிக மாசு அடைவதால் மின்சாரத்தில் ஓடும் காரை வடிவமைப்பதே அந்நிறுவனத்தின் இலக்காக இருந்தது. அதன்படி அதே நேரத்தில் கார் வாங்குபவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் இலவசமாக மின்சாரம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். இவரது அறிக்கை ஆட்டோ மொபைலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த சக போட்டியாளர்கள் இவருக்கு எதிராக செயல்பட்டனர்.

Image result for tesla car

அதே சமயத்தில் இவர் கூறியபடி, வாழ்நாள் முழுவதும் இலவச மின்சாரத்தை வழங்குவதற்கு அவர் உருவாக்கிய நிறுவனமான சோலார் சிட்டி மூலம் மின்சாரம் வழங்கி வந்தார். ஆனால் இவர் ஏற்கனவே நடத்தி வந்த spacex நிறுவனம் தொடர் தோல்வியை சந்தித்ததால் மிகப்பெரிய இழப்புக்கு ஆளானார். இவர் இரண்டு நிறுவனங்களை நடத்துவதற்குக் கூட பணம் இல்லாமல் தவித்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு மிகப்பெரிய ரிஸ்கை தனது வாழ்க்கையில் எடுக்கும் விதமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் லாஞ்சர் சோதனை ஓட்டத்தை மீண்டும் தொடங்கினார்.

Image result for spacex

அது  மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதற்கு முன் சம்பாதித்ததை விட அதிகமான பணத்தை இந்த நிறுவனத்தின் மூலம் சம்பாதித்தார். சம்பாதித்த பணத்தை மீண்டும் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்க நினைத்து மொத்தமாக செலவழித்தார். பணத்தின் மீது மோகம் கொள்ளாத இவர் தற்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் நாற்பதாவது இடத்தில் இருக்கிறார். இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை இவர் அடைவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.