ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா….. RCB VS SRH இன்று மோதல்……!!

இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன 

12 ஐ.பி.எல் திருவிழாவின் 11-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி   ஹைதெராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு  நடைபெறுகிறது. ஹைதெராபாத் அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது. 2வது போட்டியில் ராஜஸ்தான் அணியை வென்றுள்ளது.

சன்ரைசர்ஸ்  அணியில் டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ், விஜய் சங்கர், ஆகியோர் பேட்டிங்கில் அதிரடி காட்டி வருகின்றனர். பவுலிங்கில் புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், ரஷித் கான் ஆகியோர் துல்லியமாக பந்து வீசினால் ரன்களை கட்டுப்படுத்த முடியும். ரஷித் கானை தவிர புவனேஸ்வர் குமாரும் , சித்தார்த் கவுலும் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். அவர்கள் பழைய பார்முக்கு திரும்பி அற்புதமாக பந்து வீசினால் எதிரணியை சமாளிக்க முடியும்.

பெங்களூரு அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் சென்னைக்கு எதிரான ஆட்டத்திலும், 2வது போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சர்ச்சை காரணமாக தோற்றது. அந்த போட்டியில் மும்பை அணியின் மலிங்கா  கடைசி பந்தில் நோ பால் வீச அதை நடுவர் கவனிக்க தவறிவிட்டார். இதனால் வெற்றி மும்பை வசம் சென்றது. பெங்களூரு அணியில் விராட் கோலி, டிவில்லியர்ஸ், பார்த்திவ் பட்டேல் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். மேலும் மொயின் அலி, ஹெட்மயர் ஆகியோர் அதிரடி காட்டினால் வெற்றி அதிக ரன்களை குவிக்க முடியும். பந்து வீச்சில் உமேஷ் யாதவ், முகமது சிராஜ், சாஹல் ஆகியோர் அசத்தினால் எதிரணியை கட்டுப்படுத்த முடியும்.

இரண்டு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பெங்களூரு அணி 07 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இதுவரை 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பெங்களூரு அணி 1 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.