ஐபிஎல் 17வது சீசன் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் மீதமுள்ள ஒரு இடத்தை கைப்பற்ற ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இன்று 7.30 மணிக்கு பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதும் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் என்பதால் இன்று நடைபெறும் போட்டி மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. மேலும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.