மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும். அதிலும், ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களுக்குள் ஆட்டத்தை வென்றால் மட்டுமே அவர்கள் உள்ளே நுழைவதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்நிலையில் போட்டி குறித்து பல தகவல்கள் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கிளி ஜோசியக்காரர் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இருவருக்கும் இடையான போட்டியில் யார் வெற்றி பெறுவார் என கிளியை சீட்டு எடுக்க சொல்லும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. அதில் மே 18 csk vs RCB க்கான போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணித்து சீட்டெடுத்து தரும்படி கிளியை வெளியே அழைக்கிறார்.

கூண்டிலிருந்து வெளியே வரும் கிளி உடனடியாக கையில் சீட்டு ஒன்றை எடுத்து ஜோசியரிடம் கொடுத்துவிட்டு மீண்டும் கூண்டிற்குள் செல்கிறது. அதை பிரித்துப் பார்க்கையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆர்சிபி அணி புகைப்படம் அதில் இடம்பெறவே அந்த அணிதான் வெற்றி பெறும் என அவர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பேசு பொருளாகியுள்ளது.