இந்த நம்பர்க்கு கால் பண்ணுங்க…. பயணிகளின் வசதிக்காக…. தொடங்கப்பட்ட சேவை மையம்….!!

கோபி, பள்ளிபாளையம் அஞ்சல் நிலையங்களில் ரயில் சேவைகளுக்கான பயணசீட்டு முன்பதிவு செய்வதற்கான சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி மற்றும் பள்ளிபாளையம் அஞ்சல் நிலையங்களில் ரயில் சேவைகளுக்கான பயண சீட்டு முன்பதிவு சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு கோபி தலைமை தபால் நிலையத்தை 04288 242770 என்ற எண்ணிலும் மற்றும் பள்ளிப்பாளையம் துணை தபால் நிலையத்தை 04288 242770 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்டெபன் சைமன் டோபியஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *