ராயப்பன் விஜய்… ”சிலை வைத்த ரசிகர்கள்”…. வெறித்தனமான கொண்டாட்டம் …!!

இன்று வெளியாகிய உள்ள பிகில் படத்தை ஓட்டு மொத்த ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

பல்வேறு தடைகளை கடந்து நடிகர் விஜயின் பிகில் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் ராயப்பன் , மைக்கில் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று திரையிடப்பட்ட பிகில் படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் மிகவும்  உற்சாகமாகவே உள்ளது.ஏற்கனவே பிகில் படம் வெற்றியடைய வேண்டுமென்று தமிழக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டனர்.

Image result for Bigil rayappan statue

இந்நிலையில் பிகில் படத்தை கொண்டாடும் வகையில் , பிகில் படத்தை வரவேற்கும் விதமாக, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ராயப்பன் கதாபாத்திரத்தில் நடித்த விஜயின் சிலை வைத்து அவரின் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாடி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *