நடைபெற்ற தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கி 6 பேர்…. கைது செய்த போலீஸ்….!!!

ரேஷன் அரிசி கடத்த முயன்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள மாங்குளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை வழிமறித்து சோதனை செய்ததில் 23 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் மினி லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ரஞ்சித், வேல் முருகன், புருஷோத்தமன், ராமச்சந்திரன், பெருமாள், ராமலிங்கம் ஆகிய 6 பேர் என்பது தெரிய வந்தது.

பின்னர் அவர்கள் 6 பேரையும்  காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில்  ராமச்சந்திரன், வேல்முருகன், ரஞ்சித் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய குற்றப்புலனாய்வு போலீஸ் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததை தொடர்ந்து அதன்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *