அதிவேகமாக வந்த லாரி…. தப்பி ஓடிய டிரைவர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி சென்றவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா மாநிலத்திற்கு லாரியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி கம்பம் மெட்டு, குமுளி மலைப்பாதை, தேவாரம் சாக்குலூத்து மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் வருவாய் துறையினர், பறக்கும் படையினர் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு சட்டவிரோதமாக லாரியில் ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருப்பதாக உத்தமபாளையம் பறக்கும் படை தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கம்பம் மெட்டு பகுதியில் வருவாய் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று வந்தது. இதனையடுத்து அதில் உள்ள லாரி டிரைவர்கள் மற்றும் உடன் இருந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அதன்பின் அதிகாரிகள் அங்கு சென்று லாரியை சோதனை செய்துள்ளனர்.

அந்த லாரியில் மூட்டை மூட்டையாக 14 டன் ரேஷன் அரிசி இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரியில் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *