பிரபல தொழிலதிபரும், டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ரத்தன் டாட்டா உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் ரத்தன் டாடாவை பற்றி பேசிய பியூஷ் கோயல் கண்ணீர் விட்டார். செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்த அவர், ஒருநாள் ரத்தன்  டாட்டா தனது வீட்டிற்கு வந்து காலை உணவு அருந்தியதாகவும், அப்போது அவர்கள், அவருக்கு சாதாரண இட்லி, சாம்பார், தோசை மட்டும் பரிமாறியதாகவும் கூறினார்.

இதற்கு ரத்தம் டாட்டா அவர்களை வெகுவாக பாராட்டியுள்ளார். உலகின் சிறந்த சமையல்காரர்களின் உணவை சாப்பிடுபவர் அவர். ஆனால் எங்களின் சாதாரண காலை உணவை சாப்பிட்டு பாராட்டினார் என்று பியூஷ் கோயல் கூறினார். அவர் எங்கள் குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொண்டார். அதோடு பரிமாறும் ஊழியரிடமும் கனிவாக நடந்து கொண்டார். மிக இனிமையான 2 மணி நேரத்தை நாங்கள் அவரிடம் செலவிட்டோம். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள நாங்கள் கூச்சப்பட்ட போது, அவர் தனது மனைவியிடம் நீங்கள் அனைவரும் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டார். 140 கோடி இந்தியர்கள் மற்றும் உலகமும் அவரை விரும்புகிறது என்று அவர் கூறி கண்கலங்கினார்.