முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் … அண்ணா பல்கலைகழகத்தில் நேரடி கலந்தாய்வு ..!!

அண்ணா பல்கலைக்கழகம்  முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்காக தமிழகத்தில் இந்த ஆண்டு 6268 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில்   எம்.இ ,  எம்.டெக் , எம்.ஆர் மற்றும் எம்.பிளான்ட் ஆகிய முதுநிலை பொறியியல் பாடப்பிரிவை தேர்வுசெய்துள்ளது  . இந்நிலையில் இந்த படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம்  அதிகாரப் பூர்வமாக இணையத்தில் வெளியிட்டுள்ளது .

Image result for anna university

மேலும் , www.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு  செய்து தங்கள் தர வரிசை எண்னை தெரிந்து கொள்ளலாம் . இந்நிலையில் தரவரிசை எண் அடிப்படையில் முதுநிலை   பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு இந்த மாதம் 27-ம் தேதி முதல் தொடங்கி  30ம் தேதி வரை அண்ணா பல்கலைகழகத்தில் நேரடி முறையில்  நடைபெற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது .