இயக்குனர் சரவணன் இயக்கத்தில், திரிஷா நடிப்பில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள்ளது.
‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். இப்படத்தை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட சில படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் சரவணன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்சன் படத்தை தற்போது இயக்கவுள்ளார். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இதைத்தொடர்ந்து திரிஷாவின் சதுரங்க வேட்டை 2, கர்ஜனை ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு ‘ராங்கி’ என்று தலைப்பு வைத்த படக்குழு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.