ராம் சரணுடன் மீண்டும் இணைந்து அப்பா நடிப்பாரா?….. நச்சுனு பதில் அளித்த சிரஞ்சீவி….!!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் தனது மகன் ராம்சரனுடன் இணைந்து நடித்த படம் “ஆச்சார்யா” இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இடையே வெளியாகி படுதோல்வி அடைந்தது. விநியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டனர். அதன் பிறகு சிரஞ்சீவி குடும்பத்திடம் நஷ்ட ஈடு கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தோல்வி காரணமாக இனி தனது மகன் ராம் சரவணன் இணைந்து நடிக்கப் போவதில்லை என்று சிரஞ்சீவி முடிவு எடுத்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

ஆனால் இதனை சிரஞ்சீவி மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, ‘ஆச்சார்யா’ படத்தின் தோல்வி என்னை பாதிக்கவில்லை. ராம் சரணையும் இது பாதிக்காது. ஏனென்றால் இயக்குனர் சொன்னபடி படத்தில் நடித்து முடித்தோம். ஆனால் ரசிகர்கள் இந்த படத்தை அங்கீகரிக்கவில்லை. இதற்காக எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க மாட்டோம் என்று அர்த்தம் ஆகி விடாது. வாய்ப்பு வந்தால், காலம் கனிந்ததால் மீண்டும் இணைந்து நடிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.