“அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து இன்று ஆலோசனை கூட்டம் “

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து ஆலோசிப்பதற்கான  சாதுக்களின் விவாத  கூட்டம் இன்று நடைபெறுகிறது.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருக்கக்க்கூடிய  சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது . இதனிடையே  மனுதாரர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் சார்பில்  அறிவுறுத்தபட்டதையடுத்து , ஓய்வு பெற்ற நீதிபதியான  கலிபுல்லாஹ், வாழும் கலை அமைப்பின் நிறுவனரான  ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞரான  ஸ்ரீராம்  ஆகியோர் அடங்கிய  சமரச குழு ஒன்று அமைக்கப்பட்டது. 

Image result for babar masuthi

இந்நிலையில், அயோத்தியில் ராம ஜென்மபூமி நியாஸ் என்ற  அமைப்பின் சார்பில் இன்று விவாத கூட்டம்   நடைபெற இருக்கிறது . இதில் நாடு முழுவதும் இருக்கக்கூடிய   சாதுக்கள் கலந்து கொண்டு  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான  ஆலோசனை நடத்த உள்ளனர். இக்கூட்டத்தில் மிக  முக்கியமான  முடிவுகள் எடுக்கப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *