“ராமலிங்கம் கொலை வழக்கு”…. அதிரடி சோதனையில் NIA….!!!!

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்ப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் வாடகை பாத்திரக்கடையி ன் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 5_ம்  தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். மார்ச் 14 _ம் தேதி தேசிய புலனாய்வு துறைக்கு மற்றபட்ட இந்த வழக்கு நேற்று விசாரணை செய்யப்பட்டது.

Image result for NIA

திருச்சி, கும்பகோணம், காரைக்கால் மற்றும் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகம் போன்ற 20_கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதணையின் போது, செல்போன்கள், சிம்கார்டுகள், லேப்டாப்கள், 2 லட்சம் ரொக்கமும், பல்வேறு ஆவணங்களும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *