மன தூய்மைக்கு ரமலான் மாத சிறப்புகள்…!!

ரமளான் மாதத்தின் சிறப்புகள் பற்றி அனைவயிரம் அறிந்து கொள்வோம்.

புனித மிக்க ரமலானை நாமெல்லாம் அடைந்திருக்கிறோம். இந்த தருணத்தில் ரமலான் மாதத்தின் உடைய சிறப்புகள் குறித்து நபிகள் நாயகம் சொன்ன வூஹாரியிலும், முஸ்லிமிலும் பதிவு செய்திருக்கிறது. ரமலான் மாதம் வந்து விட்டால்…

வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன,

நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன

ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றான்

என்று அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்கள். இந்த ரமலானுடைய மாதத்தை நாம் எவ்வாறு ஆக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், இந்த நேரத்திலே சொல்லக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த ரமநாளிலே நாமெல்லாம் உறுதி ஏற்றுக் கொள்வோம். இன்ஷா அல்லா அதிகமான இஸ்லாமிய புத்தகங்களை படிக்கக் கூடிய மக்களாகவும், குர்ஆனை படிக்க கூடிய, குர்ஆனை ஓதக்கூடிய, குரானோடு அதிகமான தொடர்பு இருப்பது, நேரங்களைச் செலவு செய்ய கூடிய மக்களாக நாம் எல்லாம் இருக்கக் கூடிய ஒரு வாக்கியத்தையும் அல்லாஹ்விடத்தில் வேண்டும்.

நபிகள் நாயகம் அழகிய வரலாற்றினை முழுவதுமாக நாம் படித்து மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும். சகாபாக்கள் வரலாற்றை நாம் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய தியாகங்களை நாம் புரிந்துகொள்வோம். மனதிற்குள் எண்ணிக் கொள்வோம், அல்லாஹ்வோடு அதிகமான நெருக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்வோம் தொழுகை மூலமாக. மற்ற நோன்புகளை விட, இப்பொழுது வரக்கூடிய ரமலான் நோன்பு நமக்கு மிகப்பெரிய ஒரு சவாலான நோன்பாக இருக்கிறது.

காரணம் இதற்கு முன்பாக நாமெல்லாம் நோன்பு இருந்தாலும், இந்த நோன்பு என்பது நாமெல்லாம் வெளியில் செல்லமுடியாத அளவிற்கு ஒரு சூழல் இருக்கக்கூடிய நேரத்தில் இந்த ரமலான் மாதத்தை அழகிய மாதமாக நாம் பயன்படுத்திக் கொண்டு, உலக மக்கள் எல்லோருக்காகவும் இந்த ரமலானுடைய மாதத்தினை நாம் இறைவனிடத்தில் பிராத்தனைகளை அதிகப் படுத்திக் கொள்வோம்.

இரவு நேரங்களிலேயே வணக்க வழிபாடுகளில் இருக்கக்கூடிய அந்த நேரத்தில், இரவு நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியில் அல்லாஹ், முதல் வானத்திற்கு இறங்கி வந்து என் அடியார்களுக்கு தேவையானதை என்னிடம் கேட்பதற்கு யாராவது இருக்கிறார்களா.? என்று அல்லாஹ் கேட்பதாக அடிகள் நபிகள் நாயகம் கூறியுள்ளார். இரவு நேரத்திலேயே, தகஜத்திடத்திலே நாம் அல்லாஹ்விடத்தில் அதிகமதிகமாக நம் மக்களுக்காகவும், உலக மக்களுக்காகவும் பிராத்தனைகளை அதிகப் படுத்திக் கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *