ரமலான் – ஈகை திருநாள் கொண்டாடுவதற்கு காரணம்….!!

ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக காரணம் குறித்து  பார்க்கலாம்.

ஏழைகளின் பசியை உணர்ந்து, அறிந்து கொள்ளவும், தன்னைத்தானே தூய்மை செய்து கொள்ளவும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இஸ்லாமிய பெருமக்கள் ஒவ்வொரு வருடங்களும் சுமார் ஒரு மாதகாலம் உண்ணா நோன்பு இருப்பார்கள். உண்ணா நோன்பு என்பது தினந்தோறும் சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது. சூரியன் மறைந்த பிறகு உண்ணலாம், பருகலாம்.

அடுத்த நாள் சூரிய உதயம் வரை. இப்படி ஒரு மாத காலம் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள்.  இந்த ஒரு மாத காலம் முடிந்த பிறகு ஈகை பெருநாள் என கொண்டாடி மகிழ்வார்கள். ஈகை பெருநாள் என்ன என்றால்.? ஈகை என்றால் தர்மம். தர்மத்தை கொண்டாடுதல், ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் தங்களால் இயன்ற அளவிற்கு தர்மம் செய்துவிட்டு ஏழைகளுக்கு, பிறகுதான் பள்ளிவாசலுக்குள் இறைவனை வணங்க நுழைய வேண்டும்.

தகாத் ஒன்று இருக்கிறது அது இஸ்லாமியர்களுக்கு கடமையாக்கப்பட்ட வரி. யாருக்கு போய் சேரவேண்டும் ஏழை மக்களுக்கு போய் சேர வேண்டும். யார் தனக்கு போக உபரியாக சேர்த்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவை கணக்கிட்டு வரியாக ஏழை பெருமக்களுக்கு ஒவ்வொரு வருடமும் கொடுத்துவிட வேண்டும் என்பது ஒன்று. ஈகை நாளை பொருத்தவரை நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.

ஒரு நாள் முன்ன பின்ன கொண்டாடுவதே நாம் பார்க்கிறோம்.  காரணம், நிலவை பொறுத்து இஸ்லாமிய கேலண்டர் அமைந்துள்ளது. சூரியனை பொருத்து அமையவில்லை என்பதால் மக்கள் எந்தெந்த பிரதேசத்தில் வசித்தாலும் அவர்களே நிலவை பார்க்கிறார்கள். அந்தப் பிறை தெரிந்த பிறகு ஈகைப் பெருநாளை கொண்டாட முடிவெடுக்கிறார்கள் என்பதற்காகவே இது அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *