அவதாரப் புருஷர்… ஆன்மீகச் சிந்தனையை உலகெங்கும் பரப்பியவர்… ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சிந்தனை வரிகள்…!!

ஸ்ரீ ராமகிருஷ்ணர் சிந்தனை வரிகள்:

  • ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டும் என்றால் ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவருக்கு தீவிரமான முயற்சி தேவை.
  • கீழே கொட்டிய கடுகை பொறுக்கி எடுப்பது போல பல திசைகளிலும் ஓடும் மனதை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதிக்க முடியும்.
  • மனிதர்கள் புகழ்வதும் விரைவு, இகழ்வதும் விரைவு. எனவே மற்றவர்கள் உன்னை பற்றி சொல்லும் வார்த்தைகளை கவனியாதே.
  • உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உமக்கு கிடைக்கும்.
  • விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி. அதில் தீ மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டவன் விஞ்ஞானி.
  • வேலை செய்வது நல்லது. அது மனத்தை பண்படுத்துகிறது ஆனால் பலன் கருதாமல் செய்ய வேண்டும்.
  • ஈரமுள்ள குச்சி தீப்பற்றாது. அதுபோல் உலக ஆசை கொண்டவனுக்கு கடவுள் அருள் கிட்டாது.
  • ஆழ்ந்த நம்பிக்கை இமயமலை போன்றது. அதை எவராலும் அசைக்க முடியாது.
  • வண்டு தேன் மலரைத் தவிர வேறு எதன்மீதும் உட்காராது. அதுபோல உண்மையான துறவி இறை ஆனந்தத்தை தவிர வேறு ஆனந்தங்களை ஏற்றுக் கொள்ள மாட்டான்
  • அறிவு பலவீனமானது நம்பிக்கை சக்தியுடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *