ராகுலை கை விட்ட வட மாநிலம்…. “கை கொடுத்த தென் மாநிலம்” 1 லட்சம் வாக்குகள் முன்னிலை….!!

வயநாடு மக்களவை தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை வகிக்கிறார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேசிய கட்சிகள்  தங்களின் பிரச்சார யுத்திகளை முன்னெடுத்தனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்குடன் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இந்த முறை இரண்டு மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். கடந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தின்  அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் இந்த முறை  வயநாடு மக்களவை தொகுதியிலும் சேர்த்து இரண்டு தொகுதியில் போட்டியிட்டார்.

இந்நிலையில் அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிட்டதால் அங்கு சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டது.  இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ராகுல் காந்தி அமேதியில் பின்தங்கியும், வயநாடு தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியில்  உள்ளார். அப்போது ராகுலுக்கு கைகொடுத்த வட மாநிலம்  கைவிட்ட நிலையில் தென் மாநிலம் ராகுலுக்கு கை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.