“நேரடி எதிர்ப்பு கிடையாது” ஒரே தேர்தல் முறை குறித்து ராஜ்நாத் சிங் பேட்டி…!!

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த நேரடி எதிர்ப்பு கிடையாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஒரே நாடு , ஒரே தேர்தல் முறையை அமுல்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்து ஆராய குழு அமைக்கப்படுமென்று மோடி தெரிவித்தார்.

 

இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய  ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் , இந்த கூட்டத்தில் பங்கேற்ற பல கட்சிகள் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இடதுசாரி கட்சிகள் இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை  தெரிவித்தன. இதற்க்கு நேரடியாக எந்த எதிர்ப்பும் கிடையாது. இருந்தாலும்  இது தொடர்பாக இருக்கும் பிரச்சினைகளை பிரதமர் மோடி அமைக்கிற குழு ஆராயும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.