லீக்கான ரஜினியின் புகைப்படம்… படக்குழுவினர் அதிர்ச்சி…!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய  படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படம் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

‘ பேட்ட’ படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப் பிடிப்பு வரும் 10-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. படப்பிடிப்பு  தொடக்கத்தின் முதல்நாள் வில்லன்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போன்ற அதிரடி சண்டை காட்சியை   படமாக்குகின்றனர்.

‘ பேட்ட’ படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். க்கான பட முடிவு

அங்கு படத்திற்காக அரங்குகள்  அமைக்கப்பட்டு உள்ளது. 3 மாதங்கள் தொடர்ந்து மும்பையில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இடையில் வருகின்ற 18-ந் தேதி மட்டும் ரஜினிகாந்த் சென்னை வந்து தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ஜூலை மாதம் சென்னையில் சில காட்சிகளை படமாக்கிய பிறகு இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிகிறது. இந்த புதிய படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு அவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சென்னையில் அமைந்துள்ள  ஸ்டூடியோவில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. ரஜினிகாந்துக்கு போலீஸ் உடை அணிவித்து புகைப்படம் எடுத்தனர்.

ரஜினிகாந்துக்கு போலீஸ் க்கான பட முடிவு

ரஜினிகாந்த் தோற்றம் வெளியாகி விடக்கூடாது என்று ரகசியமாக  புகைப்படம் எடுக்கும் பணியை படக்குழு நடத்தியது. ஆனால் யாரோ ரஜினிகாந்தின் போலீஸ் அதிகாரி தோற்றத்தை செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் கசியவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் உடையில் கம்பீரமாக இருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. படப்பிடிப்புக்கு முன்பே ரஜினிகாந்த் போலீஸ் உடை தோற்றம் வெளியானதால் படக்குழுவினர் அதிச்சியடைந்துள்ளனர்.