“மோடியின் தலைமைக்கு கிடைத்தது” வெற்றி குறித்து ரஜினி கருத்து..!!

மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக வெற்றி குறித்து ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.  

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன். மக்களவை தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி. நேரு, இந்திரா காந்தி போன்ற தலைவர்களுக்கு பிறகு மக்களை ஈர்க்கக் கூடிய தலைவராக  மோடி உள்ளார் என்று அவர் கூறினார்.