“பதவி விலகாமல் நின்று நிரூபிக்க வேண்டும்” ராகுல் குறித்து ரஜினி கருத்து..!!

ராகுல் பதவி விலகாமல் நின்று நிரூபித்து காட்ட  வேண்டும் என்று  ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே  கைப்பற்றியது. இந்த படு தோல்வியால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலகி வருகின்றனர். அதே போல காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தியும் பதவி விலகுவதாக முன் வந்தார். இதனை காங்கிரஸ் செயற்குழு நிராகரித்து விட்டது.

Image result for ராகுல், ரஜினி

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள  இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி காந்த் , காங்கிரஸ் பழமையான கட்சி. அந்த கட்சியில் மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்களை கையாள்வது இளையவரான ராகுல் காந்திக்கு கடினம் என நான் நினைக்கிறன். தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவி விலகுவதாக அறிவித்தார். அவர் பதவி விலக கூடாது. அவர் நின்று நிரூபித்து காட்ட வேண்டும். ஆளும் கட்சியை போல எதிர் கட்சியும் முக்கியம் என்பதால் அவர் பதவி விலக கூடாது என்று கூறினார்.