முக ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!!

மக்களவை தேர்தலில் திமுக தலைவர் வெற்றி பெற்றதற்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்று தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.  மக்களவை தொகுதியில் இந்திய அளவில் பாஜக 349 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் பாஜகவிற்கு வெற்றி உறுதியாகிவிட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர். ஒவ்வொரு தொகுதியாக வெற்றி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது.

Image result for Rajinikanth MK Stalin

இதனால் திமுக தலைவர்  ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ட்விட்டர் பக்கத்தில்  வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில், “மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக தலைவர் மற்றும்  மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.