நேர்கொண்டபார்வை படத்தில் நடித்த அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார் .
தல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வசூலானது இன்னும் சில நாட்களில் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூலை முறியடித்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும், குறிப்பாக பெண்களும் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் .

மேலும் இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தை பார்த்தபின் அஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்ததாகவும் அதற்கு அஜித் நன்றி தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது