மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!!

 பா.ஜ.கவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில்  பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு பதிவு எண்ணப்பட்டு வருகின்றது. காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்தது . பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image result for பிரதமர் மோடி ரஜினிகாந்த்

இந்த நிலையில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் பிரதமர் மோடிக்கு பல்வேறு   நாட்டு தலைவர்களும்,  பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு  ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “மோடிஜி நீங்கள் சாதித்து விட்டீர்கள். உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *