கமலை ஏமாற்றிய ரஜினி …… பிஜேபி_க்கு ஆதரவு…..!!

எங்களுடைய நட்பை கெடுத்து விடாதீர்கள் என்று கூறிய ரஜினி பாஜக_வின் தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ளார்.

இன்று சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளார்களை  சந்தித்தார் . அப்போது நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனுக்கு ஆதரவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்களுக்கு “என்னுடைய அரசியல் பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அதில்  எந்த மாற்றமும் கிடையாது. இதுக்கு மேல இத பத்தி பேச விரும்பவில்லை எங்கள் நட்பை கெடுத்து விடாதீர்கள்” என்று தெரிவித்தார்.

கமலை ஏமாற்றிய ரஜினி க்கான பட முடிவு

மேலும் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து நடிகர் ரஜினி கூறுகையில் , இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க தனி அமைச்சகம் அமைப்பதாக சொல்லி இருப்பதை நான் வரவேற்கின்றேன். நான் நீண்ட காலமாகவே நதிகளை இணைக்க வேண்டுமென்று மறைந்த முன்னாள் பிரதமர் வாய்பேயி_டம் தெரிவித்திருந்தேன் என்று கூறிய ரஜினி பாஜக ஆட்சிக்கு வந்த உடன் இந்திய நதிகளை இணைப்பதை முதலில் செய்யவேண்டும். இதனால் நாட்டின் வறுமை நீங்கும் என்று தெரிவித்தார்.

ரஜினி பேட்டி க்கான பட முடிவு

நடிகர் கமல்ஹாசன் ரஜினி எனக்கு ஆதரவு கொடுப்பர் என்று தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வந்த நிலையில் ரஜினி எதுமே சொல்லாமல் இருந்ததும் , பாஜகவின் தேர்தல் அறிக்கையை வரவேற்றதும் கமல்ஹாசனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.