“ரஜினி முதல்வராக வேண்டும்” சிதம்பரம் கோயிலில் சிறப்பு யாகம் …!!

2021_இல் ரஜினிகாந்த முதல்வராக வரவேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

அண்ணா , கலைஞர் , MGR மற்றும் ஜெயலலிதா என அனைவருமே கலைத்துறையில் சாதித்தவர்கள் . அவர்கள் அரசியலிலும் ஜொலித்தார்கள். இவரை போல நடிகர் விஜயகாந்த் , சீமான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களால் கணிசமான வாக்குகளே பெற முடிந்தது.

ரஜினி க்கான பட முடிவு

இந்நிலையில் சமீப காலமாக அரசியலுக்கு எப்போது வருவாரா , எப்போது வருவார் என்று பேசப்பட்டபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.போர் வரும் போது களமிறங்குவோம் என்று கூறிய ரஜினி சட்டமன்றத்தில் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

ரஜினி க்கான பட முடிவு

இந்நிலையில் வருகின்ற 2021_இல் ரஜினிகாந்த் முதல்வராக வேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் ரா சிறப்பு யாகம் நடத்தி வருகின்றார். இதில் ரஜினியின்  அண்ணன் சத்தியநாராயண ராவ் மற்றும் ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.