விஜயை விட ரஜினி அதிக சம்பளம்…. பயத்தில் மிரட்ட பார்க்கிறார்கள் – சீமான் ஆதரவு …!!

விஜயை மிரட்டுவதற்கு இந்த சோதனை நடைபெறுகின்றது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயை விட ரஜினி 120 கோடி சம்பளம் அதிகமாக சம்பளம் வாங்குகின்றார். ரஜினி வீட்டுக்கு ஏன் போகவில்லை. ரஜினி அறிக்கை விட்ட்டா அது தலைப்புச் செய்தியாக வருகின்றது. 66 லட்சம் பாக்கி வைத்திருக்கிறார் என்று செய்தி வரவில்லை அவருக்கு ஒரு புனிதர் வேடம்போட்டு காட்டுகின்றார். தமிழர்கள் போராடி குடமுழுக்கு தமிழில் நடத்த வைத்த செய்தியை மறைபடத்திற்கு அவரை வைத்து பேட்டி கொடுக்க வைக்கின்றார்கள்.

முஸ்லீம்களுக்கு பிரச்சனைனா முதலில் குரல் கொடுப்பேன் என்று சொல்கிறாரே ? சிறுமி ஆசிபாக்கு குரல் கொடுக்கல , ஜெய்ஸ்ரீராம் சொல்லி அடிக்கும் போது குரல் கொடுத்தாரா ? மாட்டுக்கறி வைத்துள்ளதாக அடிக்கும் போது குரல் கொடுத்தாரா ? என்று கேள்வி எழுப்பிய சீமான் நடிகர் விஜயை மிரட்டி பணியவைக்க இந்த ரெய்டு.விஜய்க்கு இளைஞர்கள் ,  மக்கள் செல்வாக்கு இருப்பதை கண்டு அஞ்சி அவருக்கு எதிராக இந்த சோதனை நடத்தப்படுகின்றது என்று சீமான் தெரிவித்துள்ளார்.