ரஜினி படத்தின் ரீமேக்கில் தல அஜித்?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!!!

ரஜினி நடிப்பில் வெளியாகிய பில்லா திரைப்படத்தை அஜித்குமார் நடிக்க ரீமேக் செய்து கடந்த 2007 ஆம் வருடம் வெளியிட்டனர். இந்த படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியிருந்தார். இதுபோன்று ரஜினியின் பாட்ஷா படத்தையும் ரீமேக் செய்ய முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. பாட்ஷா படம் கடந்த 1995ம் வருடம் வெளியாகி ரஜினியின் வசூல் சாதனை படங்களில் முக்கிய திரைப்படமாக அமைந்தது.

இப்போது பாட்ஷா திரைப்படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்க விஷ்ணுவர்த்தன் திட்டமிட்டு உள்ளதாகவும், இதில் அஜித்குமாரை நடிக்க வைக்க அவர் விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.