ரஜினி ஒருவர்தான் உழைப்பால் முன்னேறியுள்ளாரா?..சீமான் கேள்வி ..!!

ரஜினிகாந்த் ஒருவர் தான் உழைப்பால் முன்னேறியுள்ளாரா? என்று நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணு கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு நெல்லை மாவட்ட காவல் துறையினர் மறுப்பு அனுமதி மறுத்ததை அடுத்து  நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது.

Image result for seeman

இதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பாடபுத்தகத்தில் ரஜினி முன்னேற்றம் குறித்து இடம்பெற்றிருப்பதை விமர்சனம் செய்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நடிகர் ரஜினிகாந்த் உழைப்பால் முன்னேறி உள்ளார் என்று பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது ஏற்கத்தக்கது அல்ல ஒரு சினிமா நடிகரை பாடப்புத்தகத்தில் போட்டால் அதை படிக்கும் மாணவர்கள் அவரைத்தான் பின்பற்றுவார்கள்.

தமிழ் மண்ணை பொருத்தவரையில் எத்தனையோ மாமன்னர்கள் பல புகழ்களை தமிழ்நாட்டிற்கு சேர்த்துள்ளனர். அவையெல்லாம் பாடப்புத்தகத்தில் இடம் பெறவில்லை அவற்றைப் படித்தால் தமிழ் மண்ணிற்குரிய அருமை மாணவர்களுக்கு புரியும் அதைவிட்டுவிட்டு நடிகர்களை வசைபாடுவது  ஏற்புடையதல்ல என்றும், ரஜினி ஒருவர்தான் உழைப்பால் முன்னேறி உள்ளாரா ?என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.