ரஜினி நடிக்கும் “ஜெயிலர்” பட ரிலீஸ் தேதியில் மாற்றம்?… வெளிவரும் புது தகவல்கள்….!!!!!

நெல்சன் திலீப்குமார் டைரக்டு செய்யும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சுனில், தமன்னா, யோகிபாபு உள்பட பலர் நடிக்க, மலையாள நடிகர் மோகன்லாலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் ஜெயிலர் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக கூறப்பட்டு வருகிறது.

எனினும் தற்போது ஏப்ரல் 28ஆம் தேதி மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2ஆம் பாகம் திரைக்கு வருவதால் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைத்திருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் ஜெயிலர் படக்குழு இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடாததால் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

Leave a Reply