“ரஜினி சிறந்த நடிகரா…?”… அவருக்கு ஏன் விருது கொடுத்தீங்க…. பிரபல இயக்குனரின் பேச்சால் வெடித்த சர்ச்சை…!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான அமீர் நடிகர் ரஜினி பற்றி பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி திரைப்படத்திற்காக கடந்த 2007-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான மாநில விருது ரஜினிக்கு கிடைத்தது. இதுகுறித்து பேசிய அமீர் நடிகர் ரஜினி ஒரு சிறந்த நடிகரா.? அவர் சிவாஜி படத்தில் உண்மையாகவே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாரா.? அவர் ஒரு என்டர்டெய்னர் அவ்வளவுதான். நடிகர் ரஜினியின் ஆறிலிருந்து அறுபது வரை மற்றும் முள்ளும் மலரும் போன்ற படங்கள்தான் நல்ல படங்கள். இதற்கெல்லாம் ஏன் விருது கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply