தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ரஜினி…. மகள் வெளியிட்ட ட்விட்…!!!

முன்னணி நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல திரைப் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து பல்வேறு திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் தங்களுக்கான கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இத்தகவலை அவரது மகள் சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *