“நடிகர் ராதாரவியை வீட்டிற்கு நேரில் அழைத்து தன்னை அடிக்க சொன்ன ரஜினி”… எதற்காக தெரியுமா…? அவரே சொன்ன தகவல்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராதாரவி. இவர் படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 1995-ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான முத்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இன்று பிரபலம். இந்த படத்தில் ராதாரவி அம்பலத்தான் என்ற வில்லன் வேடத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் நடிகர் ராதாரவி முத்து படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான தகவலை அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது அம்பலத்தான் முத்துவை ஒரு காட்சியில் அடிப்பது போன்று இருக்கும்.

அந்த காட்சியில் முதலில் ரகுவரனை தான் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார்கள். ஆனால் ரகுவரன் தன்னை அடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் ராதாரவியை ரஜினி வீட்டிற்கு அழைத்து முத்து படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். நீங்கள் அடித்தால் தான் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் எனவே முத்து படத்தில் நடிங்கள் என்று ராதாரவியிடம் ரஜினி கூறியுள்ளார். உடனே ராதாரவியும் டேட்ஸ் கொடுத்து படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இந்த தகவலை ராதாரவி ஒரு பேட்டியில் கூறியுள்ள நிலையில் அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.