ரஜினி கருத்தும் தமிழக மக்களின் கருத்தும் ஒன்னு தான்…. கடம்பூர் ராஜு பேட்டி…!!

ஹிந்தி திணிப்பை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தி மொழி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த கருத்தும் இந்தியை திணிக்க கூடாது என்பதுதான் என்று குறிப்பிட்டார்.

Image result for ரஜினி கடம்பூர் ராஜு

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா காலத்திலும் சரி தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்றளவு வரை இரு மொழிக் கொள்கைகளை மட்டுமே கடைபிடித்து வருகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை எக்காரணம் கொண்டும் இந்தி மொழியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.