ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான்..!!

ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது  

ஐ.பி.எல் 45 வது லீக் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது . இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேன் வில்லியம்சனும், டேவிட் வார்னரும் களமிறங்கினர்.  கேன் வில்லியம்சன் 13 ரன்னில்   ஆட்டமிழந்தார். இதையடுத்து   மனிஷ் பாண்டேவும், டேவிட் வார்னரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது.

Image

அதன் பின் இந்த ஜோடி பிரிந்தது. டேவிட் வார்னர் 37 (32 )  ரன்களிலும்,  மனிஷ் பாண்டே 61 (36) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீரர்கள் சொல்லும் அளவிற்கு ரன்கள் சேர்க்கவில்லை. கடைசியில் ரஷித் கான் 17 (8) ரன்கள் அடிக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி  8 விக்கெட் இழந்து 160 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் வருண் ஆரோன், ஓசேன் தாமஸ், ஷ்ரேயஸ் கோபால், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Imageபின்னர் 161 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்கியே ரஹானேவும், லிவிங்ஸ்டனும்  களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினர். முக்கியமாக லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடினார். அதன் பின் லிவிங்ஸ்டன் 26 பந்துகள் 44 ரன்கள்  (4 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ரஹானேவும் 34 பந்துகள் 39 ரன்கள்  (4 பவுண்டரி, 1 சிக்ஸர்)  ஆட்டமிழந்தார். இதையடுத்து சஞ்சு சாம்சனும், ஸ்டீவ் ஸ்மித்தும் இணைஆட்டமிழந்தார் ந்தனர்.

Image

இந்த ஜோடி அணியின் வெற்றியை  நோக்கி சென்றது. இதையடுத்து ஸ்மித் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் சாம்சன் இறுதி வரை விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.இறுதியில் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழந்து  ராஜஸ்தான் அணி 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் சஞ்சு  சாம்சன்  48* (32) ரன்களிலும், டர்னர் 3* ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஹைதராபாத் அணியில் ரசித் கான்,கலீல் அகமது, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் 1 விக்கெட் வீழ்த்தினர். ராஜஸ்தான் இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது