டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்… வில்லியம்சன் அவுட்..!!

 டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. தற்போது ஹைதராபாத் அணி 6 ஓவரில்  1 விக்கெட் இழந்து 51 ரன்களுடன் விளையாடி வருகிறது.    

ஐ.பி.எல் 45 வது லீக் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Imageஇதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேன் வில்லியம்சனும், டேவிட் வார்னரும் களமிறங்கினர். கேன் வில்லியம்சன் 13 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்துவீச்சில்  ஆட்டமிழந்தார். தற்போது ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழந்து 6 ஓவர் முடிவில் 51 ரன்களுடன் விளையாடி வருகிறது. வார்னர் 20* (15) ரன்களுடனும், மனிஷ் பாண்டே  16* (7) ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.