ஜாஸ் பட்லர் ஏமாற்றம்….. ராஜஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் 31/1….!!

ராஜஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் 31/1 ரன்களுடன் விளையாடி வருகிறது. 

12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர்.  4வது ஓவரில் ரஷித் கான் பந்து வீச்சில் ஸ்வீப் சாட் அடிக்க முயன்று ஜாஸ் பட்லர் 4 (8) ரன்களில் கிளீன் போல்டனார். இதையடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.. தற்போது ரஹானே 18* (17) சாம்சன் 7 (9) ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.