“ராஜராஜ சோழன் சமூக சீர்திருத்தவாதி அல்ல”கே.எஸ்.அழகிரி சர்ச்சை பேச்சு..!!

ராஜராஜ சோழன் சமூக சீர்திருத்தவாதி கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்டவர்களின் கற்காலம் என்று இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாட்டை  நாட்டை ஆண்ட மாமன்னர் இராஜராஜ சோழனை குறித்து அவதூறு பேசியதன் காரணமாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

 

இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் வேளையில் பல்வேறு தரப்பினர் இயக்குனர் ரஞ்சித் அவர்களை எதிர்த்து கண்டனம் எழுப்பியும், எதிரான கருத்துக்களை பேசியும் வருகின்றனர். இந்நிலையில் பா ரஞ்சித் அவர்கள் பேசியதற்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கேஸ் அழகிரி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது,

ராஜராஜ சோழன் போன்ற  மன்னர்கள் சமூக சீர்திருத்தவாதிகள் கிடையாது என்றும், சோழர் ஆட்சிக்காலத்தில் சமூக நீதியும், சமூக கட்டமைப்பும் சரியாக செயல்படவில்லை என்றும்  கே.எஸ் அழகிரி சுட்டிக் காட்டியுள்ளார் .  மேலும் சோழர் ஆட்சிக் காலம் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே பொற்காலமாக அமைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.