”மும்பையை மீண்டும் மிரட்டும் மழை” மிக கனமழை வாய்ப்பு …..!!

மும்பைக்கு இன்றும் நாளையும் மிக கனமழை வாய்ப்புள்ளது என்று மும்பை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. மும்பைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு பெய்த  இந்த மழையால் அங்குள்ள தாழ்வான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.இதனால் மும்பைக்கு பொது விடுமுறை அறிவித்து மாநில அரசு மீட்பு பணியை தூரிதப்படுத்தியது.

Image

மழையின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டு இருக்கின்ற வேளையில் மும்பை வானிலை ஆய்வு மையம் மீண்டும் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து மும்பை வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குனர் கே.எஸ்.ஹோசாலிகார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில், வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சனி மற்றும் ஞாயிறன்று மும்பையில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.