வெப்பசலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் தான் தமிழகத்தை கஜா புயல் நிலைகுலையச்செய்தது. ஆனால், தற்போது வந்த பானி புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சுமார் இரண்டு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
