தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களாகவே  வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு  வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image result for Rainfall Tamil Nadu

மேலும் சென்னையை பொறுத்தவரையில்  வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.