“தல தோனி அற்புதமான வழிகாட்டி” ரெய்னா பிறந்த நாள் வாழ்த்து..!!

 அருமையான நண்பர் தல தோனிக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் 

இன்று தல தோனி தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை தமிழகம் முதல் உலகம் வரையில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தோனியின் பிறந்த நாளுக்காக ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனிக்கு நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தல தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், அருமையான நண்பர், அற்புதமான வழிகாட்டி மற்றும் ஒரு சிறந்த சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! மஹி பாய், அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை விரும்புகிறேன். நீங்கள் எப்போதும் வெற்றிகரமாக புதிய உயரங்களையும் வெற்றிகளையும் அடையவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.